தாம்பரத்தில் டீச்சருக்கு நேர்ந்த பயங்கரம்.. மகள் கண்முன்னே பிரிந்த சோகம்..!
சென்னை தாம்பரம் அருகே பள்ளி வேன் மோதி ஆசிரியை உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பனை பெருங்களத்தூர் பார்வதி நகரை சேர்ந்த ரேவதி பணப்பையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் வழக்கம் போல பள்ளிக்கு செல்வதற்காக தனது மகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். மதனபுரம் அருகே சென்ற பொழுது திடீரென அவரது மகள் தேவிகா பிரேக் போட்டதால் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் பின்னால் வந்த வேன் ஏறி இறங்கியது.
இதில் பலத்த காயமடைந்த ரேவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





