--- --:--:-- --

திமுக நிர்வாகியின் இல்ல விழாவில் பெட்ரோல் குண்டு வீச்சு..!

4

கடலூர் அருகே திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடலூர் அருகே உள்ள நல்லாத்தூர் பகுதியை சேர்ந்தவர் திமுக நிர்வாகி மணிகண்டன்.

 

இவரது இல்ல மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் கலந்து கொண்டார். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திருமண மண்டபத்தின் முன் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

 

எனினும் இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பாட்டில் மற்றும் திரியாக பயன்பட்டு வந்த துணியை கைப்பற்றி சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon