--- --:--:-- --

போலி மருத்துவர் அளித்த சிகிச்சையால் சிறுவனின் உயிர் பறிபோன பரிதாபம்..!

3

போலி மருத்துவர் அளித்த சிகிச்சையால் அப்பாவி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 13 வயது சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சிறுவன் சூரிய பிரகாஷ் நாற்றம் பள்ளி ராமகிருஷ்ணா மடத்தில் பயின்று வந்தார். இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக சிறுவனை மருத்துவரிடம் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

 

அங்கு சிறுவனுக்கு ஊசி போட்டதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பான விசாரணையில் சிறுவனுக்கு சிகிச்சை அளித்த கோபிநாத், போலி மருத்துவர் தெரிய வந்ததால் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon