ஆற்று ஓடையில் கவிழ்ந்த மினி வேன்.. 14 பேர் படுகாயம்..!
ஆத்தூர் அருகே மினி வேன் 15 அடி ஆழ ஓடையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் 14 பேர் படுகாயம் அடைந்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பழுதானது.
இதனால் அந்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் அந்த வழியாக வந்த மினி வேனில் பயணித்தனர். அப்பொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் ஓடையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.
இந்த விபத்தில் 14 பேர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





