கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட 16 வயது சிறுமி பலி..!
திருப்பூரில் கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்ட 16 வயது சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து மாத்திரை கொடுத்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி கர்ப்பமடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், யாருக்கும் தெரியாமல் கருக்கலைப்பு செய்ய முடிவு செய்தனர். இதற்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், மருத்துவர்களின் பரிந்துரையின்றி வீட்டின் அருகே உள்ள கடையில் இருந்து மாத்திரைகளை வாங்கி கொடுத்ததாக தெரிகிறது.
மருந்தை சாப்பிட்ட சிறுமிக்கு ஒவ்வாமை ஏற்பட்டதையடுத்து, வயிறு வலியால் துடித்தார். இதனையடுத்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 27ஆம் தேதி உயிரிழந்தார்.
தகவலறிந்த சென்ற காவல்துறை மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள், விசாரணை நடத்தியதில், மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரைக் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட மருந்தகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சிறுமி கர்ப்பமடைய காரணம் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




