--- --:--:-- --

அம்மா உணவகங்களை மேம்படுத்த ஒபிஎஸ் கோரிக்கை..!

3

ஏழை எளிய மக்களின் அதனை கருத்தில் கொண்டு அம்மா உணவகங்களில் நிலவும் ஊழியர் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை போன்றவற்றை சரி செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

 

உழைக்கும் மக்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தபின் அம்மா உணவகங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும் ஓபிஎஸ் குற்றம் சாட்டினார்.

 

அம்மா உணவகங்கள் கேட்பாரற்று கவனிப்பாரற்று அனாதையாக காட்சியளிப்பதாகவும் அந்த நிலையை மாற்றி முன்பு போலவே மக்கள் பயனடைய ஏதுவான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon