--- --:--:-- --

மது அருந்துபவர்களின் கூடாரமாக மாறிய அரசு பள்ளி மைதானம்..!

4

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் மது அருந்துபவர்களின் கூடாரமாக மாறி உள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 

தினமும் காலையில் பள்ளிக்கு வரும்பொழுது மது பாட்டில்களும் பிளாஸ்டிக் கப்பல்களும் குவிந்துள்ளதால் அவற்றை மிகுந்த சங்கடத்தோடு அப்புறப்படுத்த வேண்டி இருப்பதாக ஆசிரியர்கள் வேதனைப்படுகின்றனர்.

 

பள்ளி நேரத்தில் கூட சிலர் உள்ளே புகுந்து மரத்தடியில் உறங்குவது புகைப்படம் ஈடுபடுகின்றனர். பள்ளியில் காவலர் இல்லாததால் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவதாக தலைமை ஆசிரியர் ஞானசம்பந்தம் தெரிவித்தார்.

 

நூறாண்டுகள் பழமையான இந்த பள்ளியின் மாண்பை காக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon