--- --:--:-- --

ஆருத்ரா நிதி மோசடி – நடிகர் ஆர்.கே.சுரேஷ் தொடர்ந்து தலைமறைவு

2

ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் தொடர்புடைய நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஐந்து மாதத்திற்கு மேலாக தலைமறைவாக உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏஜெண்டாக செயல்பட்டு கைது செய்யப்பட்ட நடிகர் துஷாரிடம் இருந்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் 15 கோடி ரூபாய் பணம் வாங்கியது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

இதனையடுத்து அவரது அலுவலக பணியாளர்களிடம் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்.கே.சுரேஷ் வங்கி கணக்குகளில் செய்யப்பட்டுள்ள பண பரிமாற்றம் வங்கி கணக்கு விபரங்கள் அனைத்தையும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.

 

ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் முதல் கட்ட குற்ற பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon