ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்தவர் யார்..?
ஆம்பூர் அருகே ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. ரயில்வே தண்டவாளத்தில் கான்கிரீட் கலவையிலான கற்கள் இருந்தது தொடர்பாக மோப்ப நாய் உதவியோடு ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர்.
அந்த பகுதியில் சுற்றித்திரிந்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரித்ததில் தண்டவாளத்தில் கற்களை வைத்துவிட்டு அவர்தான் என தெரிய வந்தது.
விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்ததாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





