ராகுலுக்கு திருமணம்.. அன்பு கட்டளை உடன் கடிந்து கொண்ட லாலு பிரசாத்..!
பீகாரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்கு சென்ற ராகுல் காந்தியிடம் விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு லாலு பிரசாத் யாதவ் கூறினார்.
காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி அண்மையில் ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடினார். ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளாதது குறித்து பலரும் விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், ராகுல் காந்திக்கு திருமணம் தொடர்பாக அன்பு கட்டளையிட்டார். பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி சென்றிருந்தார்.
அப்பொழுது அவர் லாலு பிரசாத் யாதவை அழைத்து பேசியபோது ராகுலிடம் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பாசத்துடன் லாலு கேட்டு இருக்கிறார்.
அத்துடன் நான் கூறிய அறிவுரையை நீங்கள் கேட்கவில்லை என்று கடிந்து கொண்டதுடன் இன்னும் தாமதமாகவில்லை, விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு ராகுலிடம் லாலு கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





