--- --:--:-- --

மது பாட்டிலில் காகிதம் கிடந்ததால் குழப்பம்.. போலீசில் புகார்..!

8

புதுச்சேரி மதுக்கடையில் சலுகையில் வாங்கிய மது பாட்டிலில் காலண்டர் பேப்பர் இருந்ததால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். புதுச்சேரி – கடலூர் எல்லை பகுதியில் தனியார் மதுபார் இயங்கி வருகிறது.

 

இங்கு மது பிரியர்களுக்கு சலுகை கிடைக்கும் வகையில் இரண்டு பீர் வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தது. இதனால் தொழிலாளர்கள் இரண்டு பேர் சென்றனர்.

 

அவர்கள் பணம் கொடுத்து இரண்டு வாங்கியதும் அவர்களுக்கு சலுகையாக மேலும் ஒரு பீர் பாட்டில் வழங்கப்பட்டது. அவர்களுக்கு வழங்கப்பட்ட பீர்பாட்டிலில் தினசரி காலண்டர் காகிதம் இருந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

கேட்ட பொழுது அவர்கள் சரியான பதில் அளிக்காமல் விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் பீர் பாட்டிலில் காகிதம் இருந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon