--- --:--:-- --

பொடுகு எண்ணெய் கலந்த சத்துமாவு உணவு அருந்திய மாணவர்களுக்கு நேர்ந்த கதி..!

6

சென்னை டி நகரில் தலையில் பொடுகை போக்குவதற்காக பயன்படுத்தும் எண்ணெய் கலந்த உணவை சாப்பிட்ட மாணவர்கள் ஆறு பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

டி நகர் சாவடியில் உள்ள அரசு உதவி பெறும் மாணவர்களில் தங்கி படைக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது ஊரிலிருந்து கொண்டு வந்த சத்துமாவை தேங்காய் எண்ணெய் கலந்து சாப்பிடலாம் என்று நண்பர்களிடம் யோசனை கூறியதாக தெரிகிறது.

 

அப்போது சகமாணவர் ஒருவர் தலைக்கு பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொடுத்துள்ளார். அந்த எண்ணெயில் பொடுகை போக்குவதற்கான மருந்து எண்ணெய் கலந்திருந்தது தெரியாமல் சத்துமாவுடன் கலந்து சாப்பிட்ட மாணவர்கள் ஆறு பேர் சிறிது நேரத்திலேயே மயக்கம் அடைந்தனர்.

 

அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon