கேதார்நாத் சிவலிங்கத்திற்கு ரூபாய் நோட்டுக்களால் அபிஷேகம் செய்த பெண்..!
புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோயிலில் இளம்பெண் ஒருவர் சிவலிங்கத்திற்கு ரூபாய் தாள்களால் அபிஷேகம் செய்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையடுத்து பத்ரிநாத், கேதார்நாத் கோயில் தொகுதிகளின் தலைவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். கோவிலில் ரூபாய் தாளால் அபிஷேகம் செய்த பெண்ணை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மாவட்ட காவல் துறை தலைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





