நீலகிரியில் ஊருக்குள் இரவில் நடமாடும் சிறுத்தை.. மக்கள் அச்சம்..!
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் உலாவரும் சிறுத்தையின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இருந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்புக்கு வருவதும் விளைநிலங்களை சேதப்படுத்துவதும் வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சமீப காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதேபோல இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





