வீடியோ காலில் அரைகுறை ஆடைகளுடன் பேசிய இளம்பெண்கள்.. சமூக வலைதளத்தில் பதிவேற்றிய இளைஞர்..!
பல இளம் பெண்களுடன் வீடியோ கால் மூலமாக அந்தரங்க புகைப்படங்களை எடுத்து அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த இளைஞர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பின் நிர்வாகியாக இருப்பவர் பிரதீக் கௌடா. இவர் அந்த பகுதியில் உள்ள சில கல்லூரி மாணவிகள் இளம் பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு அதனை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக எடுத்து வைத்துள்ளார்.
அண்மையில் அவர் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த அந்தரங்க வீடியோக்களை பல்வேறு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இதையடுத்து நேற்று காவல்துறை சுயமாக வழக்கு பதிவு செய்து தலைவராக இருந்த பிரதீக் கவுடாவை கைது செய்துள்ளனர்.
அவரிடம் இருந்து செல்போன், லேப்டாப் பல பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த வீடியோக்களை வைத்து பெண்களை மிரட்டி பணம் பறித்து வந்தாரா என்று பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியலை எடுத்து அவர்களிடம் ரகசியமாக விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





