கலைஞர் கோட்டம் நாளை திறக்கப்படும் நிலையில் முதலமைச்சர் ஆய்வு..!
திருவாரூர் அருகே காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். திருவாரூர் அருகே காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் ஆய்வு செய்தார்.
திருவாரூர் காட்டூர் பகுதியில் 7000 சதுர அடியில் 12 கோடி ரூபாய் மதிப்பில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. தேர் வடிவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் கட்டடத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் நாளை திறந்து வைக்கிறார்.
கலைஞர் கூட்டத்தில் இரண்டு திருமண அரங்குகள் முத்துவேலன் நூலகம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்தை பிஹார் துணை முதலமைச்சர் கே.ஜி ஸ்ரீ அதாவது திறந்து வைக்க உள்ளார்.
மேலும் கலைஞர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவச்சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த நிலையில் முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





