தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியை சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்ற தலைமை ஆசிரியை..!
அரியலூரில் பள்ளி மாணவியை அவரது ஆசிரியை விமானத்தில் அழைத்து சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் எட்டு பேர் தேசிய திறனறிவு தேர்வு எழுதினர்.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களை தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்து செல்வதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தேர்ச்சி பெற்ற மாளிகை தலைமை ஆசிரியர் திருச்சி விமான நிலையத்திலிருந்து தனது சொந்த செலவில் சென்னை அழைத்து சென்ற ஆசிரியரின் இந்த செயல் மாணவர்கள் மத்தியில் ஊக்கத்தை ஏற்படுத்தியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





