--- --:--:-- --

பெட்ரோல் பங்கில் இருந்த எண்ணெய் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற மூவர் பலி..!

8

ஆந்திர மாநிலத்தில் பெட்ரோல் பங்கில் உள்ள எண்ணெய் சேமிப்பு தொட்டியை சுத்தம் செய்யும் பணியின் போது கால் நழுவி உள்ளே விழுந்த தொழிலாளர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.

 

அன்னமய்யா மாவட்டம் ராயசூட்டி நகரில் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தால் நடத்தப்படும் பெட்ரோல் பங்கில் உள்ள எண்ணெய் சேமிப்பு தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் மூன்று தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது தொழிலாளர் ஒருவர் கால் நழுவி உள்ளே விழுந்துள்ளார்.

 

அவரை காப்பாற்ற மற்ற இரண்டு பேரும் உள்ளே இறங்க முயன்றனர். ஆனால் அவர்களும் கால் இடறி தொட்டிக்குள் விழுந்தனர். மூன்று பேரையும் மீட்ட நிலையில் அதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon