தந்தை அருகில் அமர்ந்து ஹைவேயில் கார் ஓட்டும் 10 வயது சிறுவன்..!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சிறுவன் காரை ஓட்டிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சேலம் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த ஆம்னி காரை 10 வயது சிறுவன் ஓட்டி சென்றுள்ளான்.
அவனது அருகில் அவனது தந்தை அமர்ந்துள்ளார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது போன்ற ஆபத்தான முறையில் சிறுவர்களிடம் வாகனங்களை இயக்கத் தரும் பெற்றோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளரிடம் கேட்ட பொழுது உடனடியாக விசாரணை மேற்கொண்டு வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





