முன் வாசலில் பணம் வாங்கி பின் வாசல் வழியே தப்பி ஓட்டம்..!

திருப்பூர் மாவட்டத்தில் 2,000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற 10 சதவீத கமிஷன் தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

 

பெருமாநல்லூரை சேர்ந்த ஜெயராமன் என்பவர் தன்னிடம் 30 லட்சம் ரூபாய்க்கு 2000 ரூபாய் நோட்டுகள் உள்ளதாகவும் அதற்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வேண்டும் என்றும் பத்து சதவீதம் கமிஷன் தருவதாகவும் கூறி காலம்பாளையத்தை சேர்ந்த பைனான்சியர் சபரிநாதன் அணுகியுள்ளார்.

 

இதனை நம்பிய சபரிநாதன் 500 ரூபாய் நோட்டுகளாக 30 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு ஜெயராம் சொன்னபடி நேற்று பெருமாநல்லூரில் உள்ள சந்திரசேகர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

அப்போது அங்கிருந்து ஜெயராமன், சிவராமன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் சபரிநாதனிடம் 30 லட்சம் ரூபாய்க்கான 500 ரூபாய் நோட்டுக்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் செல்வது போல சென்று வேறு வழியாக வெளியேறி தப்பியோடி விட்டனர்.

 

இது குறித்து சபரிநாதன் அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று பேரை கைது செய்த போலீசார் 17 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ரொக்கம், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.