மகள்களுக்கு மொத்த சொத்துக்களையும் கொடுத்ததால் ஆத்திரம்.. பெற்றோரை கொன்ற மகன்..!

நாகர்கோவில் அருகே மகள்களுக்கே மொத்த சொத்தையும் கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில் பெற்றோரை அரிவாளால் வெட்டிய மகன் போலீசில் சரணடைந்தான். பவுல் – அமலோற்பவம் தம்பதிக்கு மோகன்தாஸ் என்ற மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

 

மோகன்தாஸ் வேறு மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் அதனை ஏற்றுக் கொள்ளாத தந்தை சொத்து முழுவதையும் மகள்களுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

 

இதனால் தனக்கு சொத்து கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் அடிக்கடி பெற்றோருடன் தகராறு செய்த மோகன்தாஸ் நேற்று இரவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்தவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பெற்றோரை சரமாரியாக வெட்டியுள்ளார்.

 

இதில் அவரது தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தந்தைக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மோகன்தாஸ் போலீசில் சரணடைந்தார்.