--- --:--:-- --

நகராட்சி தலைவியை கூட்ட அரங்கில் இருந்து வெளியேறவிடாமல் கதவை பூட்டிய கவுன்சிலர்கள்..!

4

செங்கோட்டை நகர மன்ற கூட்ட அரங்கில் இருந்து நகராட்சி தலைவியை வெளியே விடாமல் கவுன்சிலர்கள் கதவை பூட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

சில நாட்களுக்கு முன்னர் நகர மன்ற திட்ட குழு கூட்டத்தின் பொழுது நகராட்சி தலைவி மற்றும் கவுன்சிலர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதுபோன்ற சூழலில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நகர சபை கூட்டம் மீண்டும் தொடங்கியது.

 

இதில் 5 தீர்மானங்கள் வைக்கப்பட்டு உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்காமலேயே நிறைவேற்றப்பட்டதாக திமுக உறுப்பினர் ஒருவர் கூறினார். மற்றொரு திமுக உறுப்பினர் நிகழ்வுகளை வீடியோ எடுப்பதற்கு எதிராக சில கவுன்சிலர்கள் பிரச்சனை கிளப்பினர்.

 

இதனை தொடர்ந்து கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் நகராட்சி தலைமையாளர் ராமலட்சுமி வெளியே செல்ல முயன்றார். அவர் வெளியே செல்லக்கூடாது என கூறி சில கவுன்சிலர்கள் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் தலைவி பின்பக்க கதவை திறந்து கொண்டு கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon