லெஜண்ட் பட ஹீரோயினை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!
தமிழில் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்த லெஜண்ட் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தவர் ஹிந்தி நடிகை ஊர்வசி.ஹிந்தி சினிமாவில் தாராள கவர்ச்சி காட்டி நடித்து வரும் அவருக்கு எக்கச்சக்க ரசிகர்களும் இருக்கிறார்கள்.
தற்போது நடந்து வரும் Cannes திரைப்பட விழாவில் ரெட் கார்பெட்டில் பல இந்திய நடிகைகள் கலந்துகொண்டு வரும் நிலையில் ஊர்வசி நேற்றும் இன்றும் ரெட் கார்ப்பெட்டில் வந்திருக்கிறார்.
முதல் நாள் அவர் கழுத்தில் இருந்த முதலை நெக்லசை வைரல் ஆனது. அதற்காக நெட்டிசன்கள் அவரை கலாய்த்தனர். அதன் பின் இன்று அவர் ப்ளூ கலர் லிப்ஸ்டிக் உடன் சென்றதை பார்த்து மேலும் கலாய்த்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




