தேனியில் பரபரப்பு.. திடீரென டன் கணக்கில் செத்து மிதந்த மீன்கள்..!
தேனி அருகே மீனாட்சியம்மன் கன்மாயில் கழிவுநீர் கலப்பதால் மீன்கள் செத்து துர்நாற்றம் வீசி வருகிறது. தேனி மாவட்டம் போடி அருகே மீனாட்சியம்மன் கண்மாய்க்கு வரும் தண்ணீரில் அதிக அளவு கழிவு நீர் கலந்ததால் மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளன.
இதனால் துர்நாற்றம் வீசி தண்ணீர் மேலும் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே இங்கு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து மாசடையாமல் பாதுகாக்க வேண்டும் என பொதுப்பணித்துறை நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





