--- --:--:-- --

இளைஞரை நடுரோட்டில் தாக்கிய தாடி பாலாஜியின் மனைவி..!

4

கடன் தகராறில் தாடி பாலாஜியின் மனைவி இளைஞர் ஒருவரை தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு முதல் தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன்.

 

இவர் அதே பகுதியில் வசித்து வரும் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்தியாவிடம் 94 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். இதில் 52 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்த கலைச்செல்வன் மீதி பணத்தை கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

 

இந்த நிலையில் பணம் தொடர்பாக நேற்று இரவு கலைச்செல்வனின் வீட்டிற்கு சென்று நித்தியா கேட்டார். அப்பொழுது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதாகவும் தெரிகிறது. இதுகுறித்து இரு தரப்பினரும் மாதவரம் போலீசில் புகார் செய்தனர்.

 

இன்ஸ்பெக்டர் சிவகுமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார். நித்தியா தான் வசிக்கும் பகுதியில் எதிர் வீட்டில் ஒரு ஆசிரியையின் கார் கண்ணாடியை உடைத்ததாக மாதவரம் போலீஸ் நிலையத்தில் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon