மக்களை ஓட ஓட விரட்டிய யானை..!
கிருஷ்ணகிரி நகர் பகுதியில் இரண்டு நாட்களாக உலா வந்த யானைகள் ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டது. சமுத்திர ஏரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இரண்டு நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன.
யானைகள் கிருஷ்ணகிரி நகர் பகுதியில் உலா வந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் கிருஷ்ணகிரி மற்றும் ராயக்கோட்டை வனதுறையினர் யானைகளை வனத்துக்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.
இரண்டு யானைகளும் கிருஷ்ணகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட வன பகுதிக்குள் சென்று ஆந்திர மாநிலத்திற்குள் நுழைந்தன. இதனால் அச்சம் அடைந்த மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





