விரலில் மை இருந்தால் ஹோட்டலில் உணவு இலவசம்..!
கர்நாடகாவில் முதல் முறை வாக்காளர்களை ஊக்குவிக்க உணவக உரிமையாளர் ஒருவர் கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் முறை வாக்களிப்பவர்கள் வாக்களித்த பின் கைவிரலில் வைக்கப்பட்ட மையை காண்பித்தால் இலவசமாக பட்டர் தோசை, மைசூர்பா, ஜூஸ் மற்றும் சினிமா டிக்கெட் வரும் வழங்கப்படும் என பெங்களூரில் உள்ள தனியார் உணவு உரிமையாளர் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை கடந்த 2018 – 2019 தேர்தல்களிலும் அந்த ஹோட்டல் உரிமையாளர் செயல்படுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





