--- --:--:-- --

தாய்க்காக போலீசில் புகார் அளித்த ஒன்பது வயது மகன்..!

8

தினமும் குடித்துவிட்டு வந்து தன் தாயை தந்தை அடிப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை என காவல் நிலையத்தில் ஒன்பது வயது சிறுவன் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆந்திர மாநிலம் பாபட்டிலா மாவட்டத்தில் ஒன்பது வயதான ரஹிம் என்ற சிறுவன் தான் இந்த செயலை செய்துள்ளான். சிறுவனின் தந்தை தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனை ரஹீமால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

 

இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண வேண்டும். அதே ஊரில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று போலீசில் வாய்மொழியாக புகார் அளித்தான். அந்த புகாரில் தந்தை தினமும் குடித்துவிட்டு வந்து என் அம்மாவை அடிக்கடி துன்புறுத்துகிறார். அடிக்க வேண்டாம் என்று தாய் கேட்டாலும் என் தந்தை அவரை விடுவதில்லை.

 

எனவே என் தந்தையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த சிறுவன் கூறியிருந்தான். சிறுவனின் புகாரை ஏற்றுக்கொண்ட அவர் உடனடியாக ரஹீம்மின் வீட்டிற்கு சென்று அவருடைய தாய், தந்தையையும் காவல் நிலையத்திற்கு வரவழைப்பதற்கு அறிவுரை கூறியதோடு சிறுவனின் தந்தையை கடுமையாக எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon