வந்தே பாரத் ரயிலில் ஏறிய எடப்பாடி பழனிசாமி..!
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வந்தே பாரத் ரயிலில் வந்த புகைப்படத்தை பலரும் வெளியிட்டிருக்கிறார்கள். எடப்பாடிக்கு மட்டுமல்ல, சேலத்தில் உள்ளவர்கள் எல்லாருக்கே சென்னைக்கு செல்ல விமானத்தை நாடுவதை விட வந்தே பாரத் ரயிலில் வருவது தான் சிறந்தது.
சென்னையில் இருந்து கோவை அதிவேகத்தில் செல்லும் ஆம்னி பேருந்துகளில் கூட 8 மணி நேரம் ஆகும். நீங்கள் கோயம்பேட்டில் ஏறினால் நிச்சயம் இன்னும் கூடுதலான நேரமே ஆகும். ஏனெனில் சென்னையின் போக்குவரத்து நெரிசல் அப்படி, சென்னையில் இருந்து செங்கல்பட்டு பரனூர் டோல்கேட்டை தாண்டிவிட்டால், கோவைக்கு பயண நேரம் என்பது ஆறு மணி நேரமே அதிகம் தான். அந்த அளவிற்கு வேகமாக செல்கின்றன.
சென்னையில் இருந்து கோவைக்கு பகல் நேரத்தில் செல்ல வந்தே பாரத் ரயில் விடப்பட்டிருக்கிறது. வெறும் 5.50 மணி நேரத்தில் கோவைக்கு சென்றுவிடும். கோவையில் இருந்து சென்னைக்கும் இதே நேரத்தில் வந்துவிடுகிறது.
சென்னையில் இருந்து கோவைக்கே 5.50 மணி நேரத்தில் வரமுடிகிறது என்றால் சேலத்தை பற்றி யோசித்து பாருங்கள். வெறும் 3.45 மணி நேரத்தில் சேலத்தில் இருந்து சென்னையை அடைந்து விட முடியும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




