தூக்கு தண்டனைக்கு பதிலாக புதிய தண்டனை – மத்திய அரசு தகவல்
தூக்கு தண்டனைக்கு பதிலாக வேதனை குறைந்த மரணம் என்பதை நிறைவேற்றுவது குறித்து ஆராய குழு அமைக்கப்பட உள்ளதாக உச்ச நீதிமன்றத்தின் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளுக்கு வலியற்ற முறையில் மரண தண்டனையை நிறைவேற்ற கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தூக்கு தண்டனைக்கு பதிலாக வேதனை குறைந்த மாற்றுத் தண்டனை வழங்குவது குறித்து ஆராய்வதற்கு குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை இரண்டாவது வாரத்தில் பட்டியலிடுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





