--- --:--:-- --

பட்ஜெட் குறித்து அறிக்கை வழியாக இபிஎஸ்-க்கு விளக்கிய முதல்வர்..!

2

எல்லோருக்கும் எல்லாம் என்ற திசை நோக்கிய பயணம் தொடரும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் திராவிட மாடல் என்ற கருத்துக்கு முழுமையான எடுத்துக்காட்டாக நிதிநிலை அறிக்கை வெளியாகியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தலைமுறைகளை தாண்டி வாழ்வளிக்கும் அறிக்கையாக அமைந்திருப்பதாக கூறிய முதலமைச்சர் திமுக ஆட்சிக்கு வரும்பொழுது 62,000 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை நடப்பு மதிப்பீடுபடி 30 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

 

மகளிர் உரிமைத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்ட முதலமைச்சர் தமிழ்நாடு மகளிர் வாழ்வில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்த போகும் மகத்தான அறிவிப்பாக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

 

நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை அறிக்கையில் விரைவாக சுட்டிக்காட்ட உள்ள முதலமைச்சர் ஒவ்வொரு தனிமனித நலனை உள்ளடக்கியதும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு வளர்ச்சியை மனதில் வைத்தும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

இது ஒரு கட்சியின் அரசல்ல. ஒரு இனத்தின் அரசு கொள்கையின் அரசு என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் இந்த உள்ளடக்கங்களை அறியா பக்குவம் இல்லாத எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி மின்மினி பூச்சியை போன்றது இந்த அறிக்கை என்று கூறி இருப்பதாக முதலமைச்சர் சுட்டி காட்டியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon