--- --:--:-- --

ஆட்சியர் வீட்டின் முன் கைக்குழந்தையுடன் இளைஞர் தீக்குளிக்க முயற்சி..!

10

தான் வளர்க்கும் சண்டை சேவலை கேட்டு தன்னை தாக்குவதாக கூறி சிவகங்கை ஆட்சியர் வீட்டின் முன்பு இளைஞர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

சிவகங்கையை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான மாரி என்பவர் சண்டை சேவல் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த சேவலை ஒருவர் விலைக்கு கேட்டு வற்புறுத்தியதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் மாரியை தாக்கியதாக கூறப்படுகிறது .

 

இதனால் விரக்தி அடைந்த இளைஞர் தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வீட்டின் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

உடனே பொதுமக்கள் மற்றும் போலீசார் இளைஞரை மீட்டநிலையில் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon