--- --:--:-- --

அமெரிக்காவையே மோசடி செய்த நித்யானந்தா..!

1

அமெரிக்காவின் 30க்கும் மேற்பட்ட நகரங்களை நித்தியானந்தாவின் கைலாசா நாடு ஏமாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பாலியல் புகாரில் சிக்கி இந்தியாவை விட்டு தப்பி சென்ற சாமியார் நித்தியானந்தா தனது ஆசிரமத்தை கைலாசா என்ற தனிநாடு உருவாக்கியுள்ளதாக கூறி வருகிறார்.

 

சில தினங்களுக்கு முன்பு கைலாசா ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்றதால் கைலாசவை ஐ.நா. அங்கீகரித்ததாக நித்தியானந்தாவின் சீடர்கள் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவில் 30 நகரங்களை கைலாசா ஏமாற்றியுள்ளது தெரியவந்தது.

 

சில தினங்களுக்கு முன்பு நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நிர்வாகத்துடன் கைலாசா மேற்கொண்ட ஒப்பந்தம் செய்தது ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon