--- --:--:-- --

திருச்சியில் 5 குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல்..!

3

திருச்சியில் 5 குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு பிராண வாயு உதவியோடு சிகிச்சை பெற்று வருகிறதாக அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் முதல்வர் நேரு செய்தியாளர்களிடம் பேசினார்.

 

வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 18 குழந்தைகள் உள்ளிட்ட 26 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும் காய்ச்சல் தொடர்பாக தீவிர சிகிச்சை பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் நேரு குறிப்பிட்டார்.

 

மேலும் திருச்சியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மூன்று பேர் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon