--- --:--:-- --

கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்திய மிருணாள் தாகூர்..!

12

ஆரம்பத்தில் சின்னத்திரை நடிகையாக இருந்து தற்போது பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாக மாறியிருப்பவர் தான் மிருணாள் தாகூர். கடந்த ஆண்டு வெளியான ‘சீதா ராமம்” படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்திருந்தார்.

 

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து மிருணாள் தாகூருக்கு பல தென்னிந்திய படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது.

 

தற்போது இவர் தெலுங்கு நடிகர் நானியின் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக மிருணாள் தாகூர் ரூ.6 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். நடிகை நயன்தாராவுக்கு அடுத்த படியாக மிருணாள் தாகூர் தான் அதிக சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon