எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு..அதிமுகவினர் மதுரையில் ஆர்ப்பாட்டம்..!
மதுரையில் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து மதுரை பழங்காநத்தம் அருகே முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். இந்நிலையில் அனுமதி இன்றியும் பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா அதிமுகவினர் ஆயிரம் பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





