--- --:--:-- --

நோயாளியுடன் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸில் திடீரென தீ விபத்து..!

2

ஆந்திராவில் நோயாளியுடன் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸில் தீ விபத்து ஏற்பட்டது. ஆந்திர மாநில மாவட்டத்திலுள்ள ராஜசகாபேட்டை கிராமத்தை சேர்ந்த இயேசுராஜ் என்பவருக்கு டயாலிசிஸ் செய்வதற்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவருடைய உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

 

அப்பொழுது திடீரென மின்கசிவு ஏற்பட்டு ஆம்புலன்சில் இருந்து புகை வெளியேறியுள்ளது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் ஆம்புலன்ஸ் உள் இருந்தவர்களை வெளியேற்றினார்.

 

தொடர்ந்து ஆம்புலன்ஸ் முழுவதுமாக தீப்பற்றி எரிந்த நிலையில் அதிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஆம்புலன்ஸ் வெடித்த விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon