வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.4 லட்சம் மோசடி அதிமுக ஒன்றிய பொருளாளர் கைது..!
திருச்சி திருவரம்பூர் அருகே அதிமுக ஆட்சி காலத்தில் சுகாதாரத் துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இளம் பெண்ணிடம் 4 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு ஏமாற்றியுள்ள அதிமுக ஒன்றிய பொருளாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருண்பிரசாத்தின் மனைவி ஜெனிபர் நர்சிங் முடித்திருப்பதால் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கூறி நர்சு வேலை வாங்கி தருவதாக அதிமுக பிரமுகர்கள் ராசா, வீரமலை, சுப்பிரமணி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதற்காக ஜெனிபரிடம் 4 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





