வருகிறது புதிய ரேஷன் அட்டை..!
புதுச்சேரியில் விருப்பமுள்ளவர்களுக்கு கௌரவ குடும்ப அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ரேஷன் பொருள் இல்லாமல் கௌரவ குடும்ப அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வசதி படைத்தவர்கள் கௌரவ குடும்ப அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று குடிமைப் பொருள்கள் ழ வழங்கல் தெரிவித்துள்ளது. கௌரவ குடும்பத்திற்கு இலவச திட்டங்கள் போன்று வழங்கப்பட மாட்டாது போன்ற புதுச்சேரி அரசு விளக்கமளித்துள்ளது.
மேலும் கௌரவ குடும்ப அட்டை பெற விருப்பமுள்ளவர்கள் குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் கவுரவ குடும்பத்தை வழங்கும் திட்டம் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





