அழகு நிலையத்தில் போதைப்பொருள் விற்பனை செய்த பெண்..!
கேரள மாநிலம் சாலக்குடியில் போதை பொருள் விற்பனை செய்த அழகு கலை நிபுணர் கைது செய்யப்பட்டுள்ளார். சாலக்குடியில் அழகு நிலையத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
அதன் அடிப்படையில் அழகு நிலையத்தில் கேரள போலீசார் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருள் அங்கு இருப்பது கண்டறியப்பட்டது.
உடனடியாக போதை பொருளை பறிமுதல் செய்த போலீசார் அழகு கலை நிபுணரை கைது செய்தனர். பொருள் எங்கிருந்து வாங்கி விற்பனை செய்யப்படுகிறது என்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





