இரண்டு வந்தே பாரத் ரயில்களின் சேவை இன்று தொடக்கம்..!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இரண்டு வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். பிரதமர் மோடி உத்திரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதலில் உத்தரபிரதேசம் செல்லும் பிரதமர் மோடி லக்னோவில் இன்று காலை 10 மணிக்கு உலகம் முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைக்க உள்ளார். மேலும் இந்த உலகளாவிய வர்த்தக கண்காட்சி மற்றும் முதலீட்டாளர்களுக்கான அமைப்பை தொடங்கி வைக்க உள்ளார்.
இதன் பின்னர் மகாராஷ்டிரா செல்லும் பிரதமர் மோடி மும்பையில் இரண்டு வந்தே பாரத்தில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். மும்பை சோலாப்பூர் மற்றும் சாய் நகர் சீரடியில் வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





