--- --:--:-- --

இன்று விசாரணைக்கு வருகிறது அதானி வழக்கு..!

6

அதானி விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. கடந்த மாதம் அமெரிக்காவை சேர்ந்த ஹில்டன்பர்க்கு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையால் அதானி நிறுவனம் பல்வேறு முறை கேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

இந்த அறிக்கையால் அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன. அரசியல் ரீதியிலும் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

 

இந்நிலையில் அதானி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதானி குழுமம் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில் பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon