ஆபத்தான முறையில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்..!
காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்தில் பணியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்வது தொடர் கதையாகியுள்ளது.
காஞ்சிபுரம் உத்தரமேரூர் வழித்தடத்தில் போதிய அரசு பேருந்து இயக்கப்படாததால் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் குறைந்த அளவில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்தில் படியில் தொங்கியபடி பயணம் மேற்கொள்வது தொடர்கதையாகியுள்ளது. இதனால் அடிக்கடி பேருந்து ஓட்டுநர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது.
இதனையடுத்து காஞ்சிபுரம், உத்தரமேரூர் வழித்தடத்தில் போது அரசு பேருந்து இயக்கப்பட வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





