--- --:--:-- --

தூத்துக்குடியில் வட்டாட்சியர் மனைவி வீட்டு வாசலில் திடீர் தர்ணா..!

7

தூத்துக்குடியில் தனது குழந்தைகளை ஒப்படைக்க வலியுறுத்தி வட்டாட்சியர் வீட்டின் முன்பு அவரது மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி பறக்கும் படை வட்டாட்சியராக பணிப்பாற்றி வருபவர் ஞானராஜ்.

 

இவர் மனைவி கிரேசியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனது இரண்டு குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

அதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் இரண்டு குழந்தைகளையும் நீதிமன்றம் அழைத்து வருமாறு உத்தரவிடப்பட்டது. ஆனால் ஞானராஜ் குழந்தைகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

 

இதனையடுத்து இரு குழந்தைகளையும் உடனடியாக தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி நீதிமன்றத்தை மதித்து குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க வலியுறுத்தி ஞானராஜ் வீட்டின் முன்பு தரையில் அமர்ந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon