பேஸ்புக் காதலை நம்பி காதலி வீட்டுக்கு சென்ற காதலன்..!
facebook மூலம் பழகிய பெண்ணை திருமணம் செய்து வைக்கக்கோரி கன்னியாகுமரிக்கு சென்று ரகளை செய்த கிருஷ்ணகிரி இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்தியவருக்கு குமரி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவருடன் facebook மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இளம்பெண்ணுடன் அவர் காதலை வெளிப்படுத்திய பொழுது அதனை ஏற்க மறுத்ததுடன் அவருடன் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த அவர் வீட்டை கண்டுபிடித்து பெண் கேட்டுள்ளார். மறுப்பு தெரிவித்த தாயாரை சரமாரியாக தாக்கியதோடு இளம்பெண்ணுக்கும் அவர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பெண் வன்கொடுமை உள்ளிட்ட ஏழு சட்டப்பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





