புகாரை விசாரிக்க சென்ற உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து..!
சென்னை வேளச்சேரியில் குடும்பத் தகராறு தொடர்பாக விசாரிக்க சென்ற உதவி ஆய்வாளரை கத்தியால் குத்துவிட்டு தப்பியோட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். சென்னை வேளச்சேரியை சேர்ந்த சதீஷ், ஷாலினி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இந்நிலையில் சதீஷ் வீடு புகுந்து தாக்கியதாக ஷாலினி வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் ஆய்வாளர் சந்திரமோகன் சதீஷை காவல் நிலையம் அழைத்து வரும்படி உதவி ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு ஆய்வுக்கு சென்ற பொழுது அவரை கத்தியால் குத்திவிட்டு சதீஷ் தப்பி செல்ல முயன்றுள்ளான். ஆனால் அதை பொதுமக்கள் உதவியுடன் சதீஷை பிடித்துள்ளனர். காயமடைந்த காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதே போல ஆலந்தூர் அருகே குடிபோதையில் ஆயுதப்படை காவலர் தாக்கியதாக கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





