விவாகரத்தான பிரபல நடிகருடன் தமிழ் நடிகை காதலா..!

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் இம்ரான் கான். இவர் கடந்த 2011ம் ஆண்டு அவந்திகா மாலிக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். 2011ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி கடந்த 2019ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

 

இந்நிலையில், நடிகர் இம்ரான் கான் தற்போது பிரபல தமிழ் நடிகை லேகா வாஷிங்டன் என்பவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. அதை உறுதி செய்யும் விதத்தில் நடிகை லேகா மற்றும் நடிகர் இம்ரான் கான் பொது இடத்தில் காதல் ஜோடிகளை போல் ஒன்றாக கைகோர்த்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.

 

இதை பார்த்தவுடன் ரசிகர்கள் இருவருக்கும் இடையே காதல் உள்ளது என்றே உறுதி செய்துவிட்டனர். நடிகை லேகா தமிழில் வெளிவந்த கல்யாணம் சமையல் சாதம், ஜெயம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.