அக்னி வீர் திட்டம் நாட்டுக்கு நல்லதல்ல எம்.பி.ராகுல் காந்தி..!
மக்களின் கருத்துக்களை குடியரசு தலைவரின் உரை எதிரொலிக்கவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். விமான நிலையங்களை நிர்வகிப்பதில் அனுபவம் இல்லாத அதானி குடும்பத்திற்கு விதியை மாற்றி சலுகை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின் பொழுது காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசினார். தனது இந்திய ஒற்றுமை யாத்திரையின் மூலம் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் விவசாயிகள் பிரச்சனைகள் போன்றவை குறித்து புரிந்து கொண்டதாக தெரிவித்த ராகுல் காந்தி குடியரசு தலைவர் உரையின் இத்தகைய மக்கள் பிரச்சனைகள் எதிரொலிக்கவில்லை என்றார்.
அக்னி வீர் திட்டம் நாட்டிற்கு நல்லதல்ல எனத் தம்மிடம் பலர் கூறியதாகவும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ராணுவத்தின் மீது அக்னி வீர் திட்டத்தை திணித்துள்ளார் என்று அவர் விமர்சித்துள்ளார். அனுபவம் இல்லாத அதானி குடும்பத்திற்கு விதியை மாற்றி சலுகை அளிக்கப்பட்டுள்ளது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





