மெட்ரோ ரயிலில் மனிதன் மீது சவாரி செய்த எலி..!

டிக்கொண்டிருந்த மெட்ரோ ரயிலில் அமர்ந்திருந்த பயணியின் மீது அங்கும் இங்கும் சுற்றி வந்த எலியின் செயல் இணையத்தை கலக்கி வருகிறது. வேடிக்கையான இந்த சம்பவம் நியூயார்க் மெட்ரோ ரயிலில் நிகழ்ந்துள்ளது.

 

பேருந்துகளிலும் ரயில்களிலும் எலிகளின் நடமாட்டம் உள்ளதை நேரில் பார்த்திருக்கிறோம். ஆனால் மெட்ரோ ரயிலில் எலி நடமாட்டம் உள்ள வீடியோ வெளியாகி பயணிகளை பீதிக்கு உள்ளாகியுள்ளது. அதுவும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பயணியின் மீது ஏறி இறங்கி சுற்றி சுற்றி வந்து விளையாடுகிறது.

 

அசதியால் அதனை உணராத அந்த பயணி பின்னர் விழித்துக் கொண்டார். அதன் பின்னர் அந்த எலி தப்பியோடி விட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரை சிரிப்புக்குள்ளாக்கினாலும் மெட்ரோ ரயில் குறையை சுட்டி காட்டுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.