கோவைக்கு புதிய ஆட்சியர் பதவியேற்பு..!

கோவை மாவட்டத்தின் 183 வது ஆட்சியாளராக கிராந்தி குமார் பாடி பொறுப்பேற்றுக் கொண்டார். திருப்பூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த 2012 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான கிராந்தி குமார் பாடி கோவை மாவட்ட ஆட்சியராக அண்மையில் நிறுவனம் செய்யப்பட்டார்.

 

அதன்படி பொறுப்பேற்றுக் கொண்ட இவருக்கு முன்னாள் ஆட்சியர் மலர் கொத்துக்கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் பேசிய ஆட்சியர் கிராந்திக்குமார் மக்களின் குறைகளை கேட்கவும், அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களை சென்றடைய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.